ஒவ்வொரு ஆண்டும் இதயநோய்களுக்கு பலியாகிக்கொண்டிருக்கும் மக்களின் புள்ளவிவரங்களோடு அதிக கொலஸ்டிரால் நிகழ்வுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துகொண்டே இருக்கிறது. உட்கார்ந்த பணியாற்றும் வாழ்க்கை முறை, சீரற்ற உணவுப்பழக்கம் மற்றும் நவீன வாழ்க்கையின் அபத்தும் ஆகியன பங்களிக்கும் காரணிகளாகும்.
கொலஸ்டிரால் அளவுகளைக் கட்டுப்படுத்தும் மருந்துகளோடு, கொலஸ்டிரால் அளவுகளை குறைக்க உதவும் இயற்கை உணவுகள் சிலவும் உள்ளன:
1 . நெல்லிக்காய் (ஆம்லா)
ஆம்லா என்று சிறப்பாக அறியப்படும் நெல்லிக்காய், அது ஹைப்போலிபிடெமிக் ஆகும், அதாவது லிபிட்கள் என்று அழைக்கப்படும் கொழுப்பு அமிலங்களின் செறிவினைக் குறைக்கிறது. தினசரி 2 தேக்கரண்டி நெல்லிச் சாறு அல்லது நெல்லிக்காய் பொடியை மிதமான நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்
2. ஓட்ஸ்
ஓட்ஸ் ஆரோக்கியமான காலை உணவுத் தேர்வாக மார்க்கெட்செய்யப்படுகிறது. ஓட்ஸ் “கெட்ட கொலஸ்டிரால்” என்று அறியப்படும் எல்டிஎல் கொலஸ்டிராலைக் குறிப்பிடத்தக்க அளவு குறைக்கிறது மற்றும் அது முற்றிலும் இதயத்திற்கு உகந்த ஒன்று. ஓட்ஸில் காணப்படும் பீடா-குளுகெனுக்கு எல்டிஎல்லை கிரகித்து அதை உடலில் இருந்து வெளியேற்றும் திறன் உண்டு.
3. பீன்ஸ்
பீன்ஸ் உங்களுக்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே ஆனால் அது உடலில் கொலஸ்டிரால் அளவை கட்டுப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பீன்ஸ் நார்சத்து நிறைந்த உணவு, அது கொலஸ்டிராலுடன் கலக்கக்கூடிய ஒன்று மற்றும் அது உடலில் அதன் கிரகிப்பைத் தடுக்கிறது. சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை பீன்ஸ்களின் அனைத்து வகைகளையும் உங்கள் சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
4. கொட்டைகள்
கொட்டைகளில், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருப்பதால், வால்நட்டுகள் கொலஸ்டிராலைக் குறைப்பதில் சிறப்பானவை. வால்நட்டை வழக்கமாக சாப்பிடுபவர்களுக்கு கொலஸ்டிரால் அளவு குறைந்திருப்பதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. பாதாம் கொட்டை மற்றும் முந்திரியும் கூட இதயத்திற்கு நல்லது. நிறைய கொட்டைகளை எடுத்துக்கொள்வதும் நல்லதல்ல, ஏனென்றால் அவை அதிக கலோரிகளைக் கொண்டவை. தினசரி ஒரு கை நிறைய கொட்டைகளின் கலவையை எடுத்துக்கொள்வது போதுமானதாகும்.
5. பூண்டு
பண்டைய காலந்தொட்டே அதன் மருத்துவ மதிப்புகளுக்காக பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, கொலஸ்டிராலையும் குறைக்கிறது மற்றும் பக்கவாதங்களுக்கான பெரும் காரணமான இரத்த உறைவிற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.
6. பிளாக் டீ
பிளாக் டீ குடிப்பது கொலஸ்டிரால் அளவுகளைக் குறைப்பதாகக் காட்டியுள்ளது. தேயிலை உடலுக்கு பயன்மிக்க ஆன்டிஆக்சிடென்ட்களைக் கொண்டிருக்கிறது. அது இரத்த நாளங்களை தளர்வாக்கி, அதில் உறைவுகளும் பிளாக்கும் ஏற்படுவதைத் தடுக்கிறது.
7. பசலைக் கீரை
வைட்டமின்கள் மற்றும் கனிமங்களின் தொகுப்பினைக் கொண்டிருந்த போதும், பசலைக் கீரை இரத்தக் குழாயில் கொலஸ்டிரால் சேருவதைக் குறைக்க உதவும் லுடெயினையும் கொண்டிருக்கிறது. தினசரி அரைக் கப் பசலைக் கீரையை சாப்பிடுவது கொலஸ்டிரால் அளவுகளைக் குறைப்பதற்கான பலன்களை வழங்கும். அதை பதார்த்தமாகவோ, சலாட்களாகவோ அல்லது பொறியலாகவோ பயன்படுத்தவும்
8. ஆலசி (ஃபிளக்ஸீடுகள்)
ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் என்று அழைக்கப்படும் ஒரு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை ஃபிளக்ஸீடைக் கொண்டிருக்கிறது, அது கொலஸ்டிரால் அளவைக் குறைப்பதற்கு உதவுகிறது மற்றும் இதய நோய்களுக்கு எதிராகவும் பாதுகாக்கிறது
எனவே, உங்கள் கொலஸ்டிராலைக் கட்டுக்குள் வைப்பதற்காக உங்கள் தினசரி டயட்டில் இந்த உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள். மேலும், அறிவுபூர்வமான உணவுத் தேர்வுகள், உடற்பயிற்சி மற்றும் வழக்கமாக கொலஸ்டிரால் அளவுகளைக் கண்காணிப்பது ஆகியவற்றுடனான ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுங்கள். ஆரோக்கியமாக இருங்கள், மகிழ்ச்சியாக இருங்கள்!
Appreciate this post. Let me try it out.
Pingback: Pause Your Work : Stretch… Repeat! | 1mg Capsules