முகப்பு>insulin glargine
Insulin Glargine
Insulin Glargine பற்றிய தகவல்
Insulin Glargine எப்படி வேலை செய்கிறது
Insulin Glargine நீண்ட காலம் செயல்படும் ஒரு இன்சுலின், அது ஊசி போட்டப் பின் 24 மணி நேரத்திற்கு வேலை செய்கிறது. அது உடலில் உற்பத்தி செய்யப்படும் இன்சுலினை போன்று செயல்படுகிறது. இன்சுலின் தைசை மற்றும் கொழுப்பு அணுவிலிருந்து கொழுப்பை மீண்டும் எடுத்துக்கொள்ள செய்கிறது மற்றும் கல்லீரலில் இருந்து குளுக்கோஸ் வெளிப்படுவதைத் தடுக்கிறது.
Common side effects of Insulin Glargine
இரத்த சர்க்கரை அளவு குறைதல், ஊசி போடும் இடத்தில் ஒவ்வாமை எதிர்வினை
Insulin Glargine கொண்ட மருந்துகள்
LantusSanofi India Ltd
₹640 to ₹21364 variant(s)
BasalogBiocon
₹565 to ₹17826 variant(s)
BasugineLupin Ltd
₹640 to ₹11532 variant(s)
GlaritusWockhardt Ltd
₹450 to ₹21368 variant(s)
GlarviaPfizer Ltd
₹4751 variant(s)
XglarEris Lifesciences Ltd
₹610 to ₹32043 variant(s)
Nobeglar UNOMankind Pharma Ltd
₹6851 variant(s)
BasaglarCipla Ltd
₹640 to ₹7692 variant(s)
ToujeoSanofi India Ltd
₹1540 to ₹46203 variant(s)
NobeglarMankind Pharma Ltd
₹610 to ₹8223 variant(s)
Insulin Glargine தொடர்பான நிபுணரின் அறிவுரை
- இன்சுலின் கிலார்ஜைன் உட்கொள்ளும்போது நீங்கள் கருவுற்றிருந்தாலோ அல்லது கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ ; நீங்கள் சிறுநீரக அல்லது கல்லீரல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால்; நீரிழிவு நோய் இருந்தால் சிறப்பு முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
- இன்சுலின் உட்கொள்ளும்போது மது அருந்துதலை தவிர்க்கவேண்டும்
- உங்களுக்கு ஊசிபோட்ட இடத்தில் சிவந்துபோகுதல், வீங்குதல், சினப்பு மற்றும் அரிப்பு ஏற்பட்டால், சருமத்தில் சினப்பு, அரிப்பு அல்லது தோல் வீக்கம், இளைப்பு அல்லது சுவாசிப்பதில் சிரமம், முகம், உதடுகள், நாக்கு மற்றும் உடலின் இதர பாகங்கள் வீங்குதல்; அல்லது குளிர் வியர்வை போன்ற குறைந்த இரத்த சர்க்கரை அளவுகளின் அறிகுறிகள் அனுபவித்தல்; குளிர்ந்த வெளிறிய தோல் ; தலைவலி, விரைவான இருதய துடிப்பு, நோய்வாய்ப்படுதல், மிகவும் பசியெடுத்தல், பார்வையில் தற்காலிக மாற்றங்கள், மயக்கம், அசாதாரண தளர்ச்சி மற்றும் தொய்வு, நரம்புத்தளர்ச்சி அல்லது பயம், பதட்டமாக உணர்தல், குழப்பமாக உணர்தல், கவனம் செலுத்துவதில் சிரமம் போன்ற ஏதேனும் ஒவ்வாமை எதிர்வினைகளை அனுபவித்தால், உடனடியாக நிறுத்திவிட்டு மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
- வைட்டமின்கள் மற்றும் மூலிகை ஊட்டச்சத்துக்கள் போன்ற நீங்கள் உட்கொள்ளும் அனைத்து மருந்துகள் பற்றியும் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- நீங்கள் பல் அறுவைசிகிச்சை போன்ற எந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டாலும், இன்சுலின் கிலார்ஜைன் பயன்படுத்துகிறீர்கள் என்று மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- இன்சுலின் கிலார்ஜைன் தயாரிப்புகள் சருமத்தின் கீழ் பகுதியில் செலுத்தப்படுவதாகும். இதனை நரம்பில் அல்லது தசையில் செலுத்தக்கூடாது.
- ஊசியிடும் இடங்கள் மேல் கை(டெல்டாயிட்), அடிவயிறு, பின்புறம் மற்றும் தொடை பகுதிகளில் மாற்றி மாற்றி அடுத்தடுத்து செலுத்தப்படவேண்டும், இதனால் ஒரு இடத்தில் 1அல்லது 2 வாரங்களுக்கு ஒருமுறைக்கு மேல் போடக்கூடாது. இது ஊசி போட்ட இடத்தில் சரும மாற்றங்களுக்கு உட்படுத்தலை குறைக்கும்.
- இன்சுலின் அல்லது இன்சுலின் கிலார்ஜைன் தயாரிப்புகள் இரண்டையும் டைலியுட் அல்லது கலக்கவோ கூடாது. மேலும் மருந்தளவில் வலிமை, உற்பத்தியாளர், வகை, மூலப்பொருள் அல்லது தயாரிப்பு முறை போன்றவை மாறக்கூடும் என்பதை நினைவில் கொள்ளவும்.
- இன்சுலின் கிலார்ஜைன் தெளிவாக இல்லாமல் அல்லது நிறமற்று அல்லது ஏதேனும் பொருட்கள் தென்பட்டால் அதனை பயன்படுத்தக்கூடாது.
- காட்ரிட்ஜ்-ஐ லோட் செய்தல், ஊசியை பொருத்துதல், பாதுகாப்பு சோதனையை மேற்கொள்ளுதல் மற்றும் இன்சுலின் ஊசியை போடுவது குறித்து இன்சுலின் கிலார்ஜைன் வயல்/கொள்கலனில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை படித்து பின்பற்றவேண்டும்.
- உங்களுக்கு ஹைப்போக்ளைசீமியா (அதாவது குளிர் வியர்வை; குளிர்ந்த வெளிறிய சருமம்; தலைவலி, விரைவான இருதய துடிப்பு, நோய்வாய்ப்படுதல், மிகவும் பசியெடுத்தல், பார்வையில் தற்காலிக மாற்றங்கள், மயக்கம், அசாதாரண தளர்ச்சி மற்றும் தொய்வு, நரம்புத்தளர்ச்சி அல்லது பயம், பதட்டமாக உணர்தல், குழப்பமாக உணர்தல், கவனம் செலுத்துவதில் சிரமம் போன்றவை) அறிகுறிகளை அனுபவித்தால், சர்க்கரை அல்லது கார்போஹைட்ரேட்ஸ் போன்றவற்றை உட்கொண்டு விரைவாக உங்கள் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தவும்.
- உங்களுக்கு குறைந்த/அதிக சர்க்கரை அளவுகள் இருந்தாலோ அல்லது உங்கள் பார்வையில் ஏதேனும் பிரச்னையை சந்தித்தாலோ உங்களால் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படுவதால், இயந்திரங்களை கையாளும்போதும் ஓட்டும்போதும் முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.