Isotretinoin Topical
Isotretinoin Topical பற்றிய தகவல்
Isotretinoin Topical இன் பயன்கள்
முகப்பரு (பருக்கள்) சிகிச்சைக்காக Isotretinoin Topical பயன்படுத்தப்படும்
Isotretinoin Topical எப்படி வேலை செய்கிறது
Isotretinoin Topical தோலின் இயற்கை எண்ணெய் உற்பத்தியை குறைக்கிறது மற்றும் தோலின் வீக்கம் மற்றும் சிவத்தைலை குறைக்கிறது. ஐஸோடிரெனினைன் டாபிகல் என்பது ரெடினாய்ட் (வைட்டமின் Aயின் வடிவம்) என்று அழைக்கப்படும் மருந்துகளின் வகையை சார்ந்த்து. அது எண்ணெய் சுரப்பிகளில் இருந்து எண்ணெய் சுரப்பை குறைப்பதன் மூலம் பருவைக்கட்டுப்படுத்துகிறது. அது சிவந்த, வீங்கிய பரு புள்ளிகள், தளவர்வான பிளாக்ஹெட்கள் ம்ற்றும் ஒயிட்ஹெட்களின் எண்ணிக்கைய குறைக்கவும் செய்கிறது மற்றும் புதிய பிளாக்ஹெட்/ஒயிட்ஹெட்/புள்ளிகளின் உருவாக்த்கதை தடுக்கிறது.
Isotretinoin Topical கொண்ட மருந்துகள்
Isotretinoin Topical தொடர்பான நிபுணரின் அறிவுரை
- கருவுறும் நேரத்தில் அல்லது கர்ப்பகாலத்தில் உட்கொண்டால்,ஐசோட்ரேடினாயின் டாப்பிக்கல் தீவிர பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும். ஐசோட்ரேடினாயின் சிகிச்சையில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் (குறைந்தது இரண்டு வகை கருத்தடை) போன்ற போதுமான கருத்தடை நடைமுறைகளை மேற்கொள்ளவேண்டும்.
- உங்களுக்கு முகப்பரு தவிர்த்த ஏதேனும் சரும பிரச்சனை அல்லது போட்டோஒவ்வாமை, வைட்டமின் ஏ நச்சு/ஒவ்வாமை அல்லது பரம்பரைசரும புற்றுநோய் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- ஐசோட்ரேடினாயின் டாப்பிக்கல் சிகிச்சையின்போது அதிகமான சூரியஒளி அல்லது UV கதிர்கள் வெளிப்பட்டை தவிர்க்கவேண்டும் ஏனெனில் இது சூரிய உணர்திறனை அதிகரிக்கக்கூடும்.
- இந்த சிகிச்சையில் இருக்கும்போது சருமத்தை பாதுகாக்க சன்ஸ்க்ரீன் மற்றும் பாதுகாப்பு ஆடைகளை அணியவேண்டும்.
- ஐசோட்ரேடினாயின் உடன் வைட்டமின் ஏ ஊட்டச்சத்துக்களை உட்கொள்ளக்கூடாது.
- ஐசோட்ரேடினாயின் டாப்பிக்கல் ஆயின்மென்டை பிளந்த, உடைந்த அல்லது சூட்டுக்கட்டி சருமத்தில் தடவக்கூடாது.
- ஐசோட்ரேடினாயின் டாப்பிக்களை உங்கள் சருமத்தில் மட்டுமே பயன்படுத்தவும். கண்கள், உதடுகள் மற்றும் வாயில் படுவதை தவிர்க்கவும். மருந்தானது சருமத்தின் மடங்கி இருக்கும் பகுதிகள் மற்றும் மூக்கின் மடிப்புகளில் (சிரிப்பு வரிகள்) தேங்குவதை தவிர்க்கவேண்டும்.
- ஐசோட்ரேடினாயின் டாப்பிக்கல் சிகிச்சையில் இருக்கும்போது எந்தவகையான ஹேர் ரிமூவல் அல்லது சரும சிகிச்சைகள் அல்லது லேசர் சரும சிகிச்சைகள் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.
- ஐசோட்ரேடினாயின் அல்லது அதன் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருந்தால் இதனை பயன்படுத்தக்கூடாது.
- கருவுற்றிருக்கும், கருவுற திட்டமிட்டிருக்கும் அல்லது பால் புகட்டும் பெண்கள் இதனை பயன்படுத்தக்கூடாது.