Raltegravir
Raltegravir பற்றிய தகவல்
Raltegravir இன் பயன்கள்
எச்ஐவி தொற்று சிகிச்சைக்காக Raltegravir பயன்படுத்தப்படும்
Raltegravir எப்படி வேலை செய்கிறது
Raltegravir நோயாளிகளில் வைரஸில் வளர்ச்சிக்கு உதவும் இரசாயனங்களுடன் வேலை செய்வதை நிறுத்துகிறத.
Common side effects of Raltegravir
தூக்கமின்மை, களைப்பு, தலைவலி, குமட்டல், தூக்க கலக்கம், தசை வலி, வயிற்றுப்போக்கு, கல்லீரல் என்ஜைம் அதிகரித்தல்
Raltegravir கொண்ட மருந்துகள்
ZepdonCipla Ltd
₹83041 variant(s)
IsentressMSD Pharmaceuticals Pvt Ltd
₹86891 variant(s)
RaltegravirGlobela Pharma Pvt Ltd
₹86891 variant(s)
Raltegravir தொடர்பான நிபுணரின் அறிவுரை
- ரால்ட்டேக்ரேவிர் உட்கொள்வதற்கு முன் உங்களுக்கு பினைல்கீடோநியூரியா (தீவிர பரம்பரை குறைபாடு), மருத்துவ பின்னணி மனசோர்வு இருத்தல் அல்லது ஏதேனும் மனநல நோய், தீவிர கல்லீரல் குறைபாடுகள் அல்லது தசை குறைபாடுகள் (மையோபதி அல்லது ராப்டோமைலோசிஸ்) இருந்தால் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
- உங்களுக்கு இறுக்கம், வலி அல்லது மூட்டு நகர்வில் சிரமம் அல்லது விளக்கமுடியாத தசை வலி, தளர்ச்சி மற்றும் மென்மை அல்லது ரால்ட்டேக்ரேவிர் சிகிச்சையின்போது காய்ச்சல் போன்ற ஏதேனும் தொற்று அறிகுறிகள் தென்படுதல் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
- ரால்ட்டேக்ரேவிர் உட்கொண்டபிறகு மற்றும் உட்கொள்வதற்கு 2 மணிநேரத்திற்கு முன் அலுமினியம் அல்லது மக்னீஷியம் உள்ள ஆண்டாஅமிலங்களை தவிர்க்கவேண்டும்.
- ரால்ட்டேக்ரேவிர் உட்கொண்ட பிறகு உங்களுக்கு கிறுகிறுப்பாக உணர்ந்தால் இயந்திரங்களை இயக்கவோ, ஓட்டவோ அல்லது சைக்கிள் ஓட்டவோ செய்யக்கூடாது.
- ரால்ட்டேக்ரேவிர் HIV வைரஸ் இரத்தம் அல்லது பாலியல் தொடர்பு மூலமாக மற்றவர்களுக்கு பரவுவதை தவிர்க்காது. பரவுவதை தடுக்க போதுமான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
- நீங்கள் நன்றாக உணர்ந்தாலும்கூட ரால்ட்டேக்ரேவிர்-ஐ தொடர்ந்து உட்கொள்ளவேண்டும், ஏனெனில் மருந்தை தவிர்த்தல் உங்கள் நிலையை மேலும் மோசமாக்கி, சிகிச்சைக்கு தடுப்பாக இருக்கும்.
- ரால்ட்டேக்ரேவிர் சிகிச்சையில் இருக்கும்போது உங்கள் உடலில் உள்ள கொழுப்பு சத்து அதிகரித்து அது உடலின் வெவ்வேறு பகுதிகளான உங்கள் மார்பகங்கள் மற்றும் பின்புறங்களுக்கு செல்லக்கூடும் என்பதை நினைவில்கொள்ளவேண்டும்.
- நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் கூறவும். உங்கள் குழந்தைக்கு HIV தொற்று பரவுவதை தடுக்க முறையான சிகிச்சையை பெறவேண்டும்.