Retapamulin
Retapamulin பற்றிய தகவல்
Retapamulin இன் பயன்கள்
பாக்டீரியா சார்ந்த தோல் தொற்றுகள் சிகிச்சைக்காக Retapamulin பயன்படுத்தப்படும்
Retapamulin எப்படி வேலை செய்கிறது
Retapamulin தொற்றுகளை உண்டாக்கும் பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுப்பதன் மூலம் அவற்றை்க் கொல்கிறது.
Common side effects of Retapamulin
தோல் எரிச்சல்
Retapamulin தொடர்பான நிபுணரின் அறிவுரை
- ரெட்டப்புளின் வெளிப்புற பயன்பாடுகளுக்கு மட்டுமே. இதனை கண்கள், வாய் அல்லது உதடுகள், மூக்கின் உள்ளே அல்லது பெண் பாலின பகுதியின் உள்ளே பயன்படுத்தக்கூடாது. இந்த பகுதிகளில் பட்டுவிட்டால் உடனடியாக தண்ணீர் கொண்டு கழுவிவிட்டு, ஏதேனும் அசௌகரியம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.
- தொற்று மோசமாகுதல் அல்லது சிவந்துபோகுதல் அதிகரித்தல், எரிச்சல் அல்லது இதர அறிகுறிகள் தென்பட்டால் ரெட்டப்புளின் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும்.
- ரெட்டப்புளின் பாக்டீரியல் தொற்றுக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். இதனை வைரல் தொற்றுகளுக்கு தடவக்கூடாது.
- சிகிச்சைக்கு பிறகு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பிறகும் உங்கள் தொற்றில் எந்த முன்னேற்றமும் இல்லையென்றால் உடனடியாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
- உங்கள் மருத்துவர் அறிவுறுத்தினால் அன்றி ரெட்டப்புளின் சிகிச்சை அளிக்கப்பட இடங்களுக்கு இதர ஆயிண்ட்மென்ட், கிரீம்ஸ், லோஷன்கள் போன்றவற்றை தடவக்கூடாது.
- ரெட்டப்புளின் சரும எதிர்வினைகள் (தொடர்பு சருமதொற்றுகள்) அல்லது கண்கள் மற்றும் மியூகஸ் மெம்ப்ரேன் எரிச்சல் உண்டாக்கக்கூடும் என்பதால் இதனை கவனத்துடன் பயன்படுத்தவேண்டும்.
- நீங்கள் கருவுற்றிருந்தாலோ அல்லது கருவுற திட்டமிட்டாலோ இந்த மருந்தை உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் கூறவும்.