முகப்பு>sodium citrate
Sodium Citrate
Sodium Citrate பற்றிய தகவல்
Sodium Citrate எப்படி வேலை செய்கிறது
Sodium Citrate கோழை மெலிதாக்கி தளர்த்தி, அது இருமலில் வெளியேற்ற செய்கிறது. சோடியம் சிட்ரேட் என்பது ஒரு உப்பு மற்றும் அது சிறுநீர் ஆல்கலைனைசர் என்கிற மருந்து வகைகளை சார்ந்தது அது இரத்தம் மற்றும் சிறுநீரில் அதிப்படியான அமிலத்தை மட்டுப்படுத்துகிறது அதன்மூலம் தொடர்புடைய அறிகுறிகளில் இருந்து நிவாரணமளிக்கிறது
Sodium Citrate தொடர்பான நிபுணரின் அறிவுரை
- சோடியம் சிட்ரேட் எனிமா நீண்ட காலத்திற்கு பயன்படுத்தினால் அது வயிற்றுப்போக்கு மற்றும் திரவ இழப்பை ஏற்படுத்தும் என்பதால் இதனை பயன்படுத்தக்கூடாது.
- வயறு மற்றும் குடல் பக்க விளைவுகளை போன்றவற்றை தவிர்ப்பதற்காக சோடியம் சிட்ரேட்-ஐ சாப்பாட்டுக்கு பிறகு உட்கொள்ளவேண்டும்.
- சோடியம் சிட்ரேட் அல்லது அதன் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருந்தால் இதனை பயன்படுத்தக்கூடாது.
- நீரிழிவு, இருதய அல்லது சிறுநீரக நோய், உயர் இரத்த அழுத்தம் (ஹைப்பர்டென்சன்), சர்க்கரை சகிப்புத்தன்மை (ஏனெனில் இந்த மருந்தில் சுக்ரோஸ் இருப்பதால்), அடிசன் நோய் (ஸ்டெராயிட் ஹார்மோன்களில் போதுமான அளவுகள் இல்லாமை), குறைந்த உப்பு (சோடியம்) டயட்டில் உள்ள நோயாளிகள் அல்லது அலுமினியம் நச்சுத்தன்மை உள்ள நோயாளிகளுக்கு இதனை கொடுக்கக்கூடாது.
- ஜீரண குழாய் அழற்சி அல்லது வயற்று நோய் (எ.கா க்ரோன் நோய் மற்றும் அல்சரேடிவ் கொலாயிடிஸ் ) உள்ள நோயாளிகளுக்கு கொடுக்கக்கூடாது.
- கர்ப்பிணி அல்லது பால் புகட்டும் பெண்கள்.
- 3 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.