முகப்பு>insulin lispro protamine
Insulin Lispro Protamine
Insulin Lispro Protamine பற்றிய தகவல்
Insulin Lispro Protamine எப்படி வேலை செய்கிறது
Insulin Lispro Protamine ஒரு இன்சுலின் ஆகும். அது உடலில் உற்பத்தி செய்யப்படும் இன்சுலினை போன்று செயல்படுகிறது. இன்சுலின் தைசை மற்றும் கொழுப்பு அணுவிலிருந்து கொழுப்பை மீண்டும் எடுத்துக்கொள்ள செய்கிறது மற்றும் கல்லீரலில் இருந்து குளுக்கோஸ் வெளிப்படுவதைத் தடுக்கிறது.
Common side effects of Insulin Lispro Protamine
இரத்த சர்க்கரை அளவு குறைதல், ஊசி போடும் இடத்தில் ஒவ்வாமை எதிர்வினை
Insulin Lispro Protamine கொண்ட மருந்துகள்
Insulin Lispro Protamine தொடர்பான நிபுணரின் அறிவுரை
- எப்பொழுதுமே சாப்பாடு சாப்பிட தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு இன்சுலின் லிஸ்ப்ரோ ப்ரோட்டாமின்-ஐ உட்கொள்ளவேண்டும்.
- உங்களுக்கு இருதய நோய், சிறுநீரக அல்லது கல்லீரல் நோய், நரம்பு பிரச்சனைகள் அட்ரினல், பிட்டுடரி அல்லது தைராயிடு பிரச்சனைகள் அல்லது நீரிழிவு கீடோஅசிடோசிஸ்(போதுமான இன்சுலின் இல்லாததால் உடலில் உள்ள அணுக்கள் போதுமான சர்க்கரையை பெறமுடியாத உயிர்கொல்லி நிலை)இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- ஒரு நாளுக்கு 3 அல்லது அதற்கும் மேலான இன்சுலின் ஊசிகள் போடுபவராக இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- உங்கள் இன்சுலின் தேவைகளில் ஏதேனும் அசாதாரண மாற்றங்களை கண்டாலோ, நீங்கள் விரதம் இருந்தாலோ, உங்களுக்கு உயர் இரத்த சோடியம் அளவுகள் இருந்தாலோ அல்லது நீங்கள் குறைந்த -உப்பு (சோடியம்)டயட்டில் இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும். நீங்கள் அதிகமான இன்சுலின், சாப்பாட்டை தவிர்த்தாலோ, அதிகமான உடற்பயிற்சி செய்தாலோ அது ஹைப்போக்ளைசீமியா (நடுக்கம், நரம்புத்தளர்ச்சி அல்லது பதட்டம் , வியர்த்தல், குளிர் மற்றும் ஈரத்தன்மை ,எரிச்சல், குழப்பம், குமட்டல் போன்றவை) விளைவிக்கக்கூடும்.
- காய்ச்சல் அல்லது தொற்று ஏற்படுவதில் இருந்து கவனம் தேவை, இதனால் பரிந்துரை செய்யப்பட்ட அளவை காட்டிலும் அதிகமாக சாப்பிடவோ அல்லது இன்சுலின் அளவை தவிர்த்தல்போன்றவை ஹைப்பர்க்ளைசீமியா (உயர் இரத்த சர்க்கரை அளவுகளுடன் கூடிய குழப்பம், மயக்கம் அல்லது தாகம் எடுத்தால், சிவத்தல் போன்றவை) உண்டாக்கக்கூடும்.
- இன்சுலின் லிஸ்ப்ரோ ப்ரொட்டமைன் உட்கொள்ளும்போதுஉங்கள் இரத்த க்ளுகோஸ் அளவுகள் அல்லது ஹீமோகுளோபின் A1c (HbA1c)அளவுகள் வழக்கமாக கண்காணிக்கப்படும்.
- இன்சுலின் லிஸ்ப்ரோ ப்ரொட்டமைன் கிறுகிறுப்பை உண்டாக்கக்கூடும் என்பதால் இதனை உட்கொண்டபிறகு இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.
- இன்சுலின் லிஸ்ப்ரோ ப்ரொட்டமைன் சிகிச்சையில் இருக்கும்போது மது அருந்தக்கூடாது ஏனெனில் இது பக்க விளைவுகளை அதிகரிக்கக்கூடும்.
- •நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- இன்சுலின் லிஸ்ப்ரோ ப்ரொட்டமைன் அல்லது அதன் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.
- உங்களுக்கு குறைந்த இரத்த சர்க்கரை அளவு இருந்தால் (ஹைப்போக்ளைசீமியா).