Probenecid
Probenecid பற்றிய தகவல்
Probenecid இன் பயன்கள்
கீல்வாதம் சிகிச்சைக்காக Probenecid பயன்படுத்தப்படும்
Probenecid எப்படி வேலை செய்கிறது
சிறுநீரகங்களினால் யூரேட்களை (இரத்த்தில் சிறுநீர் நுழைவது) அகத்துறிஞ்சலை தடுப்பதன் மூலம் அது செயல்படுகிறது, அதன்மூலம் யூரிக் அமிலத்தின் வெளியிடப்படுவதை அதிகரித்து யூரேட் கிரிஸ்டல்கள் மூட்டுகளில் சேர்வதைத் தடுக்கிறது. சிறுநீரகத்தால் பெநிசில்லின் போன்ற குறிப்பிட்ட நுண்ணுயிர் கொல்லிகள் வெளியேற்றப்படுவதை (இரத்தத்தில் இருந்து சிறுநீரில் வெளியேறுவது) தாமதப்படுத்தி இரத்தத்தில் அதன் செறிவினை அதிகரிக்கிறது.
Common side effects of Probenecid
வயிற்று வலி, குமட்டல், வயிற்றுப்போக்கு, பசியின்மை
Probenecid கொண்ட மருந்துகள்
Probenecid தொடர்பான நிபுணரின் அறிவுரை
- ப்ரோபினிசிட்-ஐ ஆஸ்பிரின் போன்ற சலிசைலெட்ஸ் உடன் பயன்படுத்தக்கூடாது.
- ப்ரோபினிசிட் சிகிச்சையின் முதல் 6 முதல் 12 மாதங்களுக்கு தீவிர கௌடி தாக்குதல்களை தவிர்ப்பதற்காக உங்களுக்கு கோல்ச்சினைன் அல்லது ஸ்டெராயிட் அற்ற ஆன்டி-இந்பளமேட்டரி ஏஜென்ட் (NSAID , வலி நிவாரணி) போன்றவை பரிந்துரைக்கப்படும்.
- உங்களுக்கு சிறுநீரக கற்கள், இதர சிறுநீரக குறைபாடு, வயிற்றில் புண்கள் மற்றும் சிறுகுடல் (குடல் புண்கள்)நீரிழிவு, தீவிர கல்லீரல் குறைபாடுகள், இரத்த குறைபாடுகள் அல்லது க்ளுகோஸ் 6 பாஸ்பேட் டீஹைடிரோஜேநெஸ் (G6PD ) குறைபாடு போன்றவை இருந்தால் ப்ரோபினிசிட் சிகிச்சையை தொடங்குவதற்கு முன் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.
- அனஸ்தீஷியா பெறவிருக்கும் ஏதேனும் அறுவைசிகிச்சை அட்டவணை செய்யப்பட்டிருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- ப்ரோபினிசிட் பயன்படுத்தும்போது சிறுநீரக கற்களை தவிர்ப்பதற்காக போதுமான தண்ணீர் அல்லது திரவங்கள் உட்கொள்ளப்படவேண்டும்.
- • நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- ப்ரோபினிசிட் கிறுகிறுப்பை உண்டாக்கக்கூடும் என்பதால் இயந்திரங்களை இயக்கும்போதோ அல்லது ஓட்டும்போதோ கவனமாக இருக்கவேண்டும்.